வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த 'எல்.வி.எம் 3' - "இது அடுத்த திட்டத்திற்க்கு ஊக்கமளிக்கும்" - இஸ்ரோ தலைவர் சோமநாத் பேச்சு

x

'எல்.வி.எம் 3' ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்பட்ட வெற்றி, ககன்யான் திட்டத்திற்கான செயல்பாடுகளில் மிகுந்த ஊக்கமளிக்கும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின் பேசிய அவர், எல்.வி.எம் 3 ராக்கெட் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வெற்றி தங்கள் அணிக்கு ஊக்கமளிக்கும் என கூறிய அவர், வரும் காலங்களில் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்