தரமான படங்களுக்கு மானியம் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

x

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான படங்களுக்கு மானியம் வழங்கப்படும் என அரசு செய்தித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 முதல் 2022ஆம் ஆண்டு வரை சின்னத்திரை சார்ந்து விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில், 2014 முதல் 2022ஆம் ஆண்டுகள் வரையிலான சின்னத்திரை விருதுகள் இந்தாண்டு வழங்கப்படும் என அரசு கொள்கை விளக்க குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, 2015 முதல் 2022 ஆம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் படங்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழு தேர்வு செய்யும் ஒவ்வொரு படத்திற்கும் 7 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்