"சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு பரப்புகிறார்கள்" - உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஈஷா கோரிக்கை

x

சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோருக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈஷா யோகா மையம், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த திருப்பூரை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சுபஸ்ரீயின் மரணம் துரதிர்ஷ்வசமானது என்றும், அவரின் மரணம் அதிர்ச்சி, வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுபஸ்ரீயின் மரணம் குறித்து பல்வேறு வதந்திகள், அவதூறுகளை சில இயக்கங்கள் உள்நோக்கத்தோடு பரப்பி வருவதாகவும் இது கண்டிக்கத்தக்கது என்றும் ஈஷா தெரிவித்துள்ளது.

காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் சிலர் சுயலாபத்திற்காக இதை அரசியலாக்கி வருவதாகவும், எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஈஷா மையம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்