தலையில் முட்டை பெட்டி கவுத்துக்கிட்டு தேர்வு எழுதும் மாணவர்கள் -ஆசிரியர்களின் பலே ஐடியா

x

பிலிப்பைன்ஸ் நாட்டில் மாணவர்கள் தேர்வெழுதும் போது காப்பியடிப்பதை தடுக்க வேடிக்கையான முறை கையாளப்பட்டது இணையத்தில் பரவி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில், லெகஸ்பி சிட்டி என்ற பகுதியில் இயங்கி வரும் கல்வி கூடத்தில் மாணவர்கள் தேர்வெழுதும் போது காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் தலையை சுற்றி கார்ட் போர்டு, பேப்பர், முட்டை பெட்டி ஆகியவற்றால் மறைத்து தேர்வெழுதும் புகைப்படங்காள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், மாணவர்கள் தேர்வின் போது அருகிலிருப்பவர்களை பார்த்து எழுதுவதை தடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, இவ்வாறு வேடிக்கையான முறையில் அவர்கள் வீட்டில் உள்ள பொருள்களை வைத்து தொப்பி வகையில் மாணவர்களே உருவாக்கியதாகக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்