ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவர்கள்-ராஜ்பவனுக்கு அழைத்த ஆளுநர்...!

x

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். பின்னர், அப்பகுதி மீனவர்களை தனியார் மஹாலில் சந்தித்து கலந்துரையாட சென்றார். அவரை, மாணவர்கள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர். தொடர்ந்து, ஆளுநர் முன்பு நடனமாடியும், யோகா மற்றும் பிரமிடு போன்ற பயிற்சிகளை செய்தும் ஆளுநரை ஆச்சர்யப்பட வைத்தனர். அதில், உடல் பருமன் அதிகமாக இருந்த ஏழாம் வகுப்பு மாணவர் ரோஹித், நடனமாடிக்கொண்டே யோகாசனம் செய்த‌து, சக மாணவர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அமைந்த‌து. மாணவர்களின் யோகா உள்ளிட்டவற்றை வியப்புடன் பார்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தொழில்முறை கலைஞர்களைப் போன்று மாணவர்கள் யோகா செய்த‌தாக பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்