ஓடும் பஸ்சில் நாலா பக்கமும் தொங்கிய மாணவர்கள்... வைரலாக பரவும் அதிர்ச்சி வீடியோ

x
  • விழுப்புரம் மாவட்டம் கோட்டமருதூர் பகுதியில், பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
  • திருக்கோவிலூரில் இருந்து கோட்டமருதூர் பகுதிக்கு மாலை நேரத்தில் அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால், தனியார் பேருந்தில் அனைவரும் ஏறும் நிலை உள்ளது.
  • இந்நிலையில், தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிகளில் தொங்கியும், பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தும், பின்பக்க ஏணியில் நின்றபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்