அரசுப்பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்... நேரில் விரைந்த மாவட்ட கல்வி அலுவலர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அரசு உயர்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்வதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

சக்கம்பட்டியில் உள்ள உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி கழிப்பறை மற்றும் வளாகத்தை சுத்தம் செய்வதுடன், ஒட்டடை அடிக்கும் வீடியோ வெளியானது.

இதையடுத்து சம்பவந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்முருகன், மாணவ, மாணவிகள், தலைமை ஆசிரியர் ஜனகராஜ் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com