மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு - 5 பேரிடம் 10 மணி நேர விசாரணை - வேகம் காட்டும் சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்பட 5 பேரிடம் 10 மணி நேர விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், அவர்களை மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், ரவிக்குமார் உள்ளிட்ட ஐவரையும், தங்கள் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர்களிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஐவரையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை மீண்டும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
