ஆங்கில ஆசிரியருடன் ஜூட் விட்ட மாணவி ரகசிய காதல்... ஆசியருடன் Birthday Party

x

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரை சேர்ந்தவர் ராஜன் ஆண்டனி போஸ்... 32 வயதான இவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்... இந்நிலையில், தன்னிடம் பயின்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மீது ஆண்டனி போசுக்கு காதல் ஏற்பட்டுள்ளது... அவர் விரித்த வலையில் மெல்ல மெல்ல விழ ஆரம்பித்த மாணவி, ஒரு கட்டத்தில் முழுமையாக விழுந்து ஆசிரியரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்...

அப்போது, மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததாலும், மாணவி பொதுத்தேர்வு எழுத இருப்பதையும் கருத்தில் கொண்ட ஆண்டனி போஸ், மாணவியுடனான காதலை ரகசியமாக வளர்த்து, கொஞ்சம் பொறுமை காத்து வந்துள்ளார்...இந்நிலையில், பொதுத் தேர்வு முடித்துவிட்டு கல்லூரி சேர இருந்த மாணவிக்கு அண்மையில் 19 வது பிறந்தநாள்கொண்டாடப்பட்டது... தோழிகளுடன் பள்ளியில் வைத்து பிறந்தநாள் கொண்டாட போவதாக சென்ற மாணவி, தனது நெருங்கிய தோழிகளுடனும், ஆசிரியர் ஆண்டனி போஸூடனும் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்...

மாணவிக்கும் ஆசிரியருக்குமிடையேயான காதல் விவகாரம் மாணவியின் நெருங்கிய தோழிகளுக்கும் தெரியும் என கூறப்படும் நிலையில், மாணவியுடன் ஆசிரியர் திடீரென தலைமறைவானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...நீண்ட நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததாலும், செல்போனில் தொடர்பு கொள்ள முடியாததாலும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியின் தோழிகளிடம் நடத்திய விசாரணையில், தங்கள் மகள் ஆசிரியரை காதலித்து வந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்..

இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில், ஆசிரியரும், மாணவியும் நாகர்கோவில் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். இந்த தகவல் அறிந்து, காவல்நிலையம் வந்த இரு வீட்டாரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்...

பேச்சுவார்த்தையில், மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலில் படிக்க வைப்பதாகவும், அதன் பின்பு ஆசிரியருக்கே திருமணம் செய்து வைப்பதாகவும் மாணவியின் வீட்டார் தெரிவித்ததாக கூறப்படுகிறது...இது தொடர்பாக இரு வீட்டாரிடமிருந்து கடிதம் எழுதி வாங்கிய போலீசார், வழக்குபதிவு எதுவும் செய்யாமல் மாணவியை அவரின் பெற்றோருடனே அனுப்பி வைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்