சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மாணவர்.. பாடி பில்டிங்கில் மிஸ்டர் இந்தியாவாக தேர்வு - தந்தை கனவை நிறைவேற்றிய மகன்

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மாணவர் உடற் கட்டமைப்பு போட்டியில் மிஸ்டர் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பி.டெக் (ஐடி ) படித்து வரும் மூன்றாம் ஆண்டு மாணவன் சிவ பாலன். இவரது தந்தை லிங்கத்திற்கு சிறு வயது முதல் உடல் கட்டமைப்பு போட்டிகளில் அதிக ஈடுபாடு உண்டு. தன் தந்தையால் முடியாததை செய்ய வேண்டும் என எண்ணி தனது 16 வது வயது முதல் தனது உடலை பல்வேறு உடற்பயிற்சிகள் மூலம் மெருகேற்றி உள்ளார் சிவபாலன். இவர் தற்பொழுது இந்திய உடற்தகுதி கூட்டமைப்பு நடத்திய பாடி பில்டிங் ஜூனியர் 70 kg பிரிவில் முதல் பரிசுப் பெற்றுள்ளார். தந்தையின் ஆசையை நிறைவேற்றி முறையாக பயிற்சி செய்து மிஸ்டர் இந்தியாவாக தற்போது சிவபாலன் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com