மாயமான மாணவி... ரயில்வே பாலம் அருகே கிடந்த ஹிஜாப்..அதிர்ந்த பெற்றோர்...மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு

x

மேட்டுப்பாளையத்தில் மாயமான தனியார் பள்ளி மாணவியின் காலணி மற்றும் ஹிஜாப், பவானி ஆற்றின் ரயில்வே பாலம் அருகே கிடந்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவரது 13 வயது மகள் தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். டியூஷனுக்கு சென்று வருவதாக சைக்களில் வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவியின் சைக்கிள், காலணி மற்றும் ஹிஜாப் ஆகியவை பவானி ஆற்றின் ரயில்வே பாலம் அருகே கிடந்துள்ளது. மேலும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறை வீரர்கள் பவானி ஆற்றில் பரிசல் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்