கோபத்தில் தலைமையாசிரியர் மண்டையை உடைத்த மாணவன் - பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்

x

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் சக மாணவியை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவனை அழைத்து தலைமையாசிரியர் கண்டித்துள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த மாணவன் தலைமையாசிரியரை தாக்கியதாகவும் அதில் அவரின் மண்டை உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்ற போதிலும் மாணவனை வேறொரு அரசு பள்ளிக்கு மாற்றி பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்