லாரியில் சிக்கி 3 கி.மீ. இழுத்து செல்லப்பட்ட பெண்... டெல்லியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி

x

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 12 கிலோ மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் ஆசிரியை ஒருவரின் இரு சக்கர வாகனம் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

அதில், 3 கிலோ மீட்டர் தூரத்தில் லாரியில் இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டதுடன்,லாரியும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்