TNPSC லெவலுக்கு ஸ்ட்ராங்கான ஆசிரியர் தேர்வு வாரியம்..! இனி மாற்றங்கள் வரும் Faster..!

TNPSC லெவலுக்கு ஸ்ட்ராங்கான ஆசிரியர் தேர்வு வாரியம்..! இனி மாற்றங்கள் வரும் Faster..!
x

ஆண்டுக் கணக்கில் உரிய வசதிகள், நவீனம் செய்யப்படாமல் இருந்துவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அதிரடி மாற்றங்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பு.....

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பாலிடெக்னிக், கல்லூரிகளுக்கான ஆசிரியர்களைத் தேர்வுசெய்வதற்கான பணியில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழகங்களுக்கான ஆசிரியர்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பும் இந்த வாரியத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், போதுமான பணியாளர்கள், கட்டமைப்பு வசதி, நவீன தொழில்நுட்பப் பயன்பாடு இல்லாமல், மந்தகதியில் இருந்துவருவதாக அதிருப்தி நிலவுகிறது.

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தை அதிரடியாக மாற்றியமைக்க அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் - டிஎன்பிஎஸ்சி அமைப்பானது, தலைவர்,14 உறுப்பினர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், செயலாளர் உட்பட இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள், 200-க்கும் அதிகமான பணியாளர்கள் என, மிக வலுவானதாக இருப்பதைப் போல, ஆசிரியர் தேர்வு வாரியமும் மாற்றியமைக்கப்பட உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குத் தலைவராக, கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் ஐஏஎஸ் அதிகாரியும்,

வாரியத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பதவி உருவாக்கப்பட்டு அதிலும் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித் துறைச் செயலர் காக்கர் லா உஷா அரசாணையில் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட வருவாய் அதிகாரி, துணை ஆட்சியர், இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி கணக்கு அதிகாரி, மேற்பார்வையாளர் நிலைகள் உள்பட 71 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வாரியத்தில் ரகசியத்தைப் பாதுகாக்க, சிசிடிவி பொருத்தவும், கண்காணிப்புக் கருவிகளை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் அனைத்தும் கணினி மூலமே நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.





Next Story

மேலும் செய்திகள்