130 மைல் வேகத்தில் சூறைக்காற்று..12 அடி உயரத்திற்கு எழுந்த கடல் அலை - 'மோக்கா' புயல் பீதியில் மக்கள்

x

அதி தீவிர புயலான 'மோக்கா' தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், வங்கதேசம் மற்றும் மியான்மரை புரட்டிப் போட்டுள்ளது.வங்க‌க் கடலில் உருவான மக்கா புயல், அதி தீவிர புயலாக மாறி வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கிசென்றது. இதனால், வடகிழக்கு இந்திய மாநிலங்களான மிசோரம், நாகலாந்து, மணிப்பூர், தெற்கு அசாமில் கனமழை பெய்த‌து. இதே போன்று, வங்கதேசம் மற்றும் மியான்மரிலும் 130 மைல் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்த‌து. பல இடங்களில் கூடாரங்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியதால் மக்கள் அச்சமடைந்தனர். மியான்மரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ராணுவம் உதவி செய்து வருகின்றது. அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் வழங்கி வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்