"புயலை கிளப்பும் எதிர்க்கட்சிகள்"- ஜூலையில் தொடங்கி ஆகஸ்ட் வரை -நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

x

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான, தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.... அதுபற்றிய விவரங்களை விளக்குகிறது இந்த தொகுப்பு..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்திற்கு முன்பாக முடிவடையும்.

வழக்கம்போல இந்த ஆண்டும் ஜூலை 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை , மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில், கூட்டத் தொடர் தொடங்கி, பின்னர் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் முடியும் என தகவல் வெளியாகியுள்ளது

கொண்டுவரப்படும் மசோதாக்கள் மற்றும் ஆக்கப்பூர்வமாக விவாதங்களுக்கு அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிவிட மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. .

டெல்லி அரசின் சேவை அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு மாற்றாக புதிய மசோதா இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அதே நேரம் பாஜக கொண்டுவரும் பொதுசிவில் சட்டத்தை கடுமையாக எதிப்பது, விலைவாசி உயர்வு, மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில்விபத்து உள்ளிட்டவற்றையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகிவருகின்றன.

எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நிலையில், இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் கவனிக்கத்தக்க ஒன்றாக கருதப்படுகின்றது.


Next Story

மேலும் செய்திகள்