அரபி கடலில் நிலை கொண்டுள்ள புயல் | biparjoy cyclone
பிபர்ஜாய் புயல் குஜராத்தில் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகிறது. குஜராத்தின் சவுராஷ்ட்ரா, கட்ச் துறைமுகம் மற்றும் பாகிஸ்தான் கடலோரப் பகுதிகளுக்கு இடையே பிபர்ஜாய் புயல் இன்று மாலைக்குள் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் பலத்த மழையுடன், மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்ட்ரா, கட்ச் பகுதிகளில் மின் சேவை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துவாரகாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற துவாரகாதீஷ் கோயில் மூடப்பட்டுள்ளது.
Next Story
