மாண்டஸ் புயல்... மரம் முறிந்து விழுந்து வீடுகள் சேதம் | Mandous Cyclone

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே, இரண்டு வீடுகளின் மீது முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினர். மாண்டஸ் புயல் காரணமாக, பட்டமந்திரி பகுதியில் உள்ள வீட்டின் மீது பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மரத்தை அறுத்து அகற்றினர். இதேபோல், மற்றொரு வீட்டின் மீது விழுந்த பனை மரத்தையும் அறுத்து அப்புறப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com