பைக்கை திருடி ஒரிஜினல் ஆர்.சி. புக்குடன்... ஓஎல்எக்சில் சிக்கிய மோசடி கும்பல் - அதிரடி காட்டிய போலீசார்

x

மதுரை சிந்தாமணி அருகே வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், பசுமலை அருகே உள்ள பைக் கன்சல்டன்சி நடத்தி வருகிறார். இவரது கடையில் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர், டியூக் பைக்கை ஒரிஜினல் RC புக்குடன் விற்பதற்காக தனது நண்பருடன் மணிகண்டனின் கடைக்கு வந்துள்ளார். அந்த இருசக்கர வாகனத்தை, மணிகண்டன் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்த இருசக்கர வாகனத்தை ஓஎல்எக்ஸில் விளம்பரம் செய்தபோது, அதனைப் பார்த்த கோவையை சேர்ந்த உரிமையாளர், மணிகண்டனை தொடர்பு கொண்டு, தனது வாகனம் எனக்கூறி, காவல்நிலைய புகாருடன் வந்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார். இதுகுறித்து மணிகண்டன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன், சக இருசக்கர வாகன விற்பனையாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, கரும்பாலை பகுதியை சேர்ந்த முருகேசன் மற்றும் அரிகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்