வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்... பிளாஸ்டிக் பைக்குள் இருந்த பயங்கரம்... அதிர்ந்த போன போலீஸ்..!

x

மகாராஷ்டிராவை சேர்ந்த தம்பதி ஒருவர், கேரள மாநிலம் கொச்சி கடவன்தரா பகுதியில் பணிபுரிந்து வந்தனர்.

அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதை தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைந்து சென்ற போலீசார், மூடப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கருப்பு நிற பிளாஸ்டிக் பையில், அந்த வீட்டில் தங்கியிருந்த இளம் பெண் கொலை செய்யப்பட்டு, சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னரே இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனவும், தலைமைறைவான அப்பெண்ணின் கணவர் குறித்தும் போலீசார், விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்