நாசுக்காக நகை திருடி விட்டு.. கமுக்கமாக அமர்ந்திருக்கும் ஊழியர்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி

x

திருப்பத்தூரில் நகைக்கடையில் பணிபுரிந்து வந்த ஊழியரே கடையில் இருந்து 10 வெள்ளி நகைகளே திருடியது அம்பலமாகியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்படியில் விஜய்ராவ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நகைகள் குறித்து கணக்கீடு எடுக்கும் போது, கடையில் இருந்து 10 கிலே வெள்ளி நகைகள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடையில் பணியாற்றி வந்த ரியாஸ் அகமது என்பவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு கடையில் இருந்து 10 கிலோ வெள்ளி நகைகளை திருடியது அம்பலமாகியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியது.


Next Story

மேலும் செய்திகள்