"நீ ரொம்ப போதையில் இருக்க... அதனால நான் பைக் ஓட்டுறேன்" - நூதனமாக பைக்கை திருடி சென்ற மர்ம நபர்

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதியில் மது போதையில் இருந்த நபரிடம் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதாக நகர காவல் துறையினருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, நம்பர் பிளேட் இல்லாமல் வந்த இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர் முத்து என்பவர், போதையில் இருந்தவரிடம் வாகனத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் முத்துவை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்