மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி...115 அணிகள் பங்கேற்பு - ஆண்கள் பிரிவில் அரைஸ் அணி வெற்றி
சென்னையில் ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கிளப் நடத்திய 17வது ஆண்டு மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் 115 அணிகள் கலந்து கொண்டன. ஆண்களுக்கான இறுதி லீக் போட்டியில் இந்தியன் வங்கி அணியை, அரைஸ் அணி 96க்கு 93 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி நாகன் மெமோரியல் கோப்பையை கைப்பற்றியது. சென்னை லயோலா கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. மகளிருக்கான இறுதி லீக் சுற்றில் ரைசிங் ஸ்டார் அணி, 68க்கு 67 என்ற புள்ளி கணக்கில் எஸ்பிசி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. ஹிந்துஸ்தான் ஜாமர்ஸ் அணி மூன்றாம் இடத்தையும், தமிழ்நாடு போலீஸ் அணி நான்காம் இடத்தையும் கைப்பற்றின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பையுடன் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மொத்தம் இரண்டு லட்சம் ரூபாயை சிறப்பு விருந்தினர் எம் ஓ பி மகளிர் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் வழங்கி கௌரவித்தார். ரைசிங் ஸ்டார் கூடைப்பந்து கழக செயலாளர் என். சம்பத், தமிழ்நாடு கூடைப்பந்து கழக செயலாளர் அசிஷ் அகமது உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
