மாநில பேரிடர் நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு | disaster Relief Fund

x

தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக 6 ஆயிரத்து 194 கோடி ரூபாயை மத்திய உள்துறை அமைச்சகம் விடுவித்துள்ளது. நடப்பு மழைக்காலத்தில் மாநில அரசுகள் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் பேரிடர் நிவாரண நிதியை அறிவித்துள்ளது. அதன்படி, 19 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக 6 ஆயிரத்து 194 கோடியே 40 லட்சம் ரூபாயை விடுவிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில், தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு 2023-24 ம் நிதியாண்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக 4 ஆயிரத்து 984 கோடியே 80 லட்சம் ரூபாய் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, சத்தீஸ்கர், மெஹாலயா, தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு, ஆயிரத்து 209 கோடியே 60 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்