சன்னி லியோன் நடித்த படத்தை பார்த்துவிட்டு 7 நிமிடம் எழுந்து நின்று கரகோஷம்!

x

அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி படத்திற்கு கேன்ஸ் விழாவில் பாராட்டுக்கள் குவிந்தன. பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் சன்னி லியோன், ராகுல் பட்-ஐ வைத்து கென்னடி படத்தை உருவாக்கியுள்ளார். இதனை முதன்முறையாக புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல திரை பிரபலங்கள், சினிமா விமர்சகர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் திரையிடப்பட்டது. படம் முடிந்த பிறகு ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று இடைவிடாது நிமிடங்கள் கரகோஷம் எழுப்பி பாராட்டியது.


Next Story

மேலும் செய்திகள்