அன்று வெள்ளம் மூடிய திருக்கடையூர் கோயிலின் இன்றைய நிலை..தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தேங்கிய மழை நீர், மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. கனமழை காரணமாக, அமிர்தகடேஸ்வரர் கோயில் வளாகத்துக்குள் தண்ணீர் தேங்கியது. இது தொடர்பாக, தந்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிப்பரப்பான நிலையில், கோயில் நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு, மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். இதனால், அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சாந்தி ஹோமத்தில், வழக்கம் போல் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
