ஊருக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊருக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பாடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி. இவருக்கும் ஸ்ரீபெரும்புதூர் பக்தவச்சலநகர் ரூபேஷ்குமார் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூபேஷ் குமார், தனது தந்தை முத்தையன், சகோதரர் மணிகண்டன், அக்கா கணவர் கணேஷ் குமார் ஆகியோருடன் பாடிச்சேரிக்கு சென்று நந்தினி குடும்பத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. ரூபேஸ்குமார் அழைத்து வந்த கும்பல் ஊருக்குள் புகுந்து இருசக்கர வாகனம், பிளாஸ்டிக் சேர் மற்றும் வீடுகளை அடித்து நொறுக்ககியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன கிராம மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரூபேஷ்குமார் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
