நண்பர்களுடன் மது அருந்திய அதிமுக பிரமுகர் - கொடூர கொலை.. காஞ்சியில் பயங்கரம்

• கிளாய் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் கண்ணன், குமரன், சுந்தரம் , ராஜ்குமார் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த விஜயகாந்த் ஆகியோருடன் ஒருக்குப்புறமான இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். • இதில், கண்ணன் பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். • விஜயகாந்த், கூடுதலாக மது வாங்கி வருவதற்காக ஸ்ரீபெரும்புதூர் சென்றுள்ளார். • பின்னர், விஜயகாந்த் மது வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, நாகராஜன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். • உடன் மது அருந்திய நண்பர்கள் மாயமாகியிருந்தனர். • இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். • கொலை செய்யப்பட்ட நாகராஜன் மீது, அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com