இலங்கை - நியூசி. முதல் டெஸ்ட் போட்டி... முதல் இன்னிங்ஸில் பட்டைய கிளப்பிய நியூசி... 2வது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை

x

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை 65 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன்களும் நியூசிலாந்து 373 ரன்களும் எடுத்தன. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கையில் தொடக்க வீரர்கள் ஃபெர்னான்டோ 28 ரன்களுக்கும், கேப்டன் கருணரத்னே 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குசல் மெண்டிஸ், 14 ரன்களுக்கு வெளியேறினார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 20 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்