6 மாதங்களுக்கு பின் இலங்கையில் மண்ணெண்ணெய் விநியோகம்

x

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், 6 மாதங்களுக்கு பின் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள அச்சுவேலி எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்னையைப் பெற ஏராளமான குவிந்தனர்.

500க்கும் மேற்பட்ட மக்கள், பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணெண்ணெயைப் பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு அதிகப்பட்சம் 3 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே மண்ணெண்ணை வழங்கப்படுகிறது. ஆனால், இந்த மண்ணெண்ணெய் விவசாய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்