இலங்கையை காப்பாற்றுமா இந்திய ரூபாய்? - 'டாலருக்கு' பதிலாக 'இந்திய ரூபாய்'

x

கடும் பொருளாதார நெருக்கடியால் ஆட்டம் கண்ட இலங்கை, இம்முறை தனது நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லவும், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்திய ரூபாயை கையில் எடுக்க இருக்கிறது.

இலங்கை - இந்திய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்படவுள்ளது. இந்தியாவுடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கை இனி இந்திய ரூபாயை பயன்படுத்தி கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி பச்சை கொடி காட்டியிருப்பதே இதற்கு காரணம்.

ஏற்கனவே மேற்கத்திய நாடுகளால் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு ஆளான ரஷ்யாவுடன் மேற்கொள்ளப்படும் இறக்குமதி - ஏற்றுமதி போன்ற வர்த்தகத்திற்கு இந்திய ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது.

தற்போது ரஷ்யாவில் 12 ஸ்பெஷல் வொஸ்ட்ரோ இந்திய ருபாய் கணக்குகளயும், இலங்கையில் 5 வொஸ்ட்ரோ இந்திய ரூபாய் கணக்குகளையும் மற்றும் மொரீஷியஸ் நாட்டில் ஒரு ஸ்பெஷல் வொஸ்ட்ரோ கணக்குகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்கள் மற்றும் இந்தியர்கள் இனி டாலருக்கு பதிலாக சர்வதேச பண பரிவர்த்தனைக்கு இந்திய ரூபாயை பயன்படுத்தி கொள்ள முடியும்

அதோடு, இதன் மூலம் இனி இலங்கை மக்கள் 8 லட்சம் ரூபாய் வரை இந்திய பணத்தை வைத்து கொள்ள முடியும். இந்த ரூபாயை இலங்கையில் உள்ள வங்கிகளில் கொடுத்து, வேறு நாட்டு பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.

டாலர் பற்றாக்குறையால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் பல நாடுகளும் வர்த்தக பயன்பாட்டிற்கு இந்திய ரூபாயை பயன்படுத்த விருப்பம் தெரிவித்து வருகின்றன. தஜிகிஸ்தான், கியூபா, லக்சம்பர்க், சூடான் போன்ற நாடுகள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளி நாடான ஐக்கிய அரபு அமீரகமுடனும் வர்த்தகத்திற்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது.

இதற்கு முன்பு 1960களின் தொடக்கத்தில் இதே போன்ற இந்திய ரூபாய் வர்த்தகம், வளைகுடா நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் போன்ற நாடுகளி டமும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிடமும் புழக்கத்தில் இருந்தது. ஆனால் 1965க்கு பிறகு அந்த முறை கைவிடப் பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் வெளிநாட்டு கரன்சியாக இந்திய ரூபாய் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை குறைவதோடு, உலகளாவிய சந்தையில் இந்தியாவின் பலம் மேலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்