கடலுக்கு சென்ற மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை - கரையில் கண்ணீர் விட்டுக் கதறும் உறவினர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளையும் விரைந்து மீட்டு தர வேண்டுமென, மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது என கவலை தெரிவிக்கும் அவர்கள், மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com