வங்கதேசத்தை மிரளவிட்ட இலங்கை.. சூப்பர் 4ல் கெத்தாக எண்ட்ரி..! - ஆசிய கோப்பை தொடர்

x

ஆசிய கோப்பை தொடரில், வங்கதேச அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூப்பர் ஃபோர் சுற்றுக்கு இலங்கை அணி தகுதிபெற்றது. துபாயில் நடைபெற்ற லீக் போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி, 19.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா, ஆப்கானிஸ்தானை தொடர்ந்து மூன்றாவது அணியாக இலங்கை அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெற்றது. கடந்த ஆசிய கோப்பை தொடரில், இறுதிப்போட்டி வரை முன்னேறிய வங்கதேச அணி, இம்முறை முதல் சுற்றுடன் வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்