இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா? வெளியான அதிர்ச்சி தகவல்

x

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வாசலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி கார் குண்டு வெடிப்பில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். அவருடைய வீட்டில் இருந்து வெடிபொருட்கள், சிலிண்டர், இஸ்லாமிய சித்தாந்தம் உளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர் வழக்கில் தொடர்புடைய 11 பேரை என்ஐஏ அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 7 பேர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலைப் போன்று இந்தியாவில் ஒரு தாக்குதலை நடத்த முபின் திட்டமிட்டு இருந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு அப்சர் கான், முகமது தல்லா, ஃபெரோஸ் மற்றும் நிவாஸ் ஆகியோர் உதவி செய்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்