"பிரதமர் மோடியின் பெருமையை நாடெங்கும் பரப்புங்கள்" - இளைஞர்களுக்கு ஜே.பி.நட்டா வேண்டுகோள்

x

2014ம் ஆண்டுக்கு முன் இந்தியா எப்படி இருந்தது? என கேள்வி எழுப்பியுள்ள அவர், ஊழல் நிறைந்ததாகவும், வளர்ச்சியில் பின் தங்கிய நாடாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டுவதாக பெருமை தெரிவித்த நட்டா, இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தையே பிரதமர் மோடி மாற்றி அமைத்துள்ளதாக கூறினார். மேலும், இந்திய அரசியலில் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள மாற்றத்தை, நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டுச் சென்று எடுத்துரைக்குமாறு இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்