சென்னையில் வருகிறது 'ஸ்பாஞ்ச் பூங்கா' - "இனி தண்ணி நிக்காது...உறிஞ்சிரும்"
- சென்னை மாநகர், மழைக்காலத்தில் வெள்ளக் காடாக மாறுவதும், கோடைகாலத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது்.
- இதற்கு நிரந்தர தீர்வு காண, நீர் மேலாண்மை திட்டத்தை, சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
- குடியிருப்புகள், தெருக்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க 4,000 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
- குளங்கள், நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு அங்கு மழைநீர் சேமிக்கப்படுகிறது.
- வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இதற்காக மழை நீரை நிலத்திற்குள் உறிஞ்சும் வகையில் 57 இடங்களில் ஸ்பாஞ்ச் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
Next Story