வேகமெடுக்கும் கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி-யின் அடுத்தகட்ட முடிவு...

x

கொடநாடு வழக்கு தொடர்பாக நடைபெற்ற சிபிசிஐடி ஆலோசனை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், உதகை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதன்படி நீலகிரி முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவை மீண்டும் அழைத்து விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ஆய்வாளராக பணியாற்றிய ஜான், கூடலூர் முன்னாள் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோருக்கு சம்மன் அனுப்பவும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று கூடலூர் பகுதி சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல் துறையினர், காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களை விசாரிக்கவும், சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்