13 நிமிடத்தில் 49 செய்திகள் : தந்தி காலை செய்திகள் | Morning News | Speed News (28.02.2023)

x

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு இன்று கடைசி நாள்... இனி கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது என மின்சார வாரியம் திட்டவட்ட அறிவிப்பு... ஆதார் இணைக்காதவர்கள் இனி ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாது எனவும் தகவல்...


  • ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குகள் பதிவான, மின்னணு இயந்திரங்கள் அனைத்தும், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன... ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் இன்று காலை அறைக்கு சீல் வைக்கப்பட்டது...


  • முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாளை பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல, தொலைபேசி எண் அறிவிப்பு... திமுக ஐ.டி. பிரிவின் புதிய முயற்சியால், முதல்வருடன் மெய்நிகர் செல்ஃபியும் எடுக்கலாம் என தகவல்...


  • 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல்... நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருப்பதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தகவல்...


  • குருப் 2 தேர்வு குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிரடி....... நேர்முகத் தேர்விற்கு தேர்வு செய்ய தாள் இரண்டில் பெறப்படும் மதிப்பெண்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு.....


  • தமிழகத்தில் முதன்முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை, அமைதியான ரயில் நிலையம் என்று அறிவித்தது தெற்கு ரயில்வே......... ரயில்களின் புறப்பாடு, வருகை குறித்த தகவல்கள் ஒலி பெருக்கி வாயிலாக அறிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் திரையில் மட்டுமே வெளியீடு......

Next Story

மேலும் செய்திகள்