13 நிமிடத்தில் 40 செய்திகள்... தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | (19.03.2023)

x
  • பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மிக்கான தடை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதவிர மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளது.


  • அதிமுகவின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.


  • மத்திய பட்ஜெட்டில், ரயில்வே திட்ட பணிகளுக்கு தென் மாநிலங்களுக்கு வெறும் 59 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக, அமைச்சர் தா.மோ. அன்பரசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை படப்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயில்வே பட்ஜெட்டில் வட மாநிலங்களுக்கு ரூ.13 ஆயிரத்து 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்..


  • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கேட் போட்டி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் விளையாடாத இந்திய கேப்டன் ரோகித் சர்மா இன்றைய தினம் களம் இறங்குவார் என்று தெரிகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா களம் காணவுள்ளது.

  • கொரோனா தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்... கொரோனா பரவத் துவங்கிய காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


  • இயக்குநர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அஜித்குமாரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு சரியாக ஓராண்டு கடந்துள்ளது. இந்த நிலையில், அவர் படத்தை விட்டு விலகியதாக தகவல் பரவி வரும் நிலையில், "கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்குறதும்" என தான் எழுதிய பாடலின் வரிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்