"இனி பெண்களை தொட்டால், 'ஷாக்' அடிக்கும்.." - பாலியல் சீண்டலில் இருந்து காக்கும் பிரத்யேக காலணி - பள்ளி மாணவி அசத்தல்...

x

களபுருகி மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமி பிராதார் என்ற பத்தாம் வகுப்பு மாணவி, மின் இணைப்பு கொண்ட காலணி ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த காலணியை அணிந்து கொள்ளும் பெண், தன்னை தவறாக தொட வரும் நபரை எட்டி உதைக்கலாம் என்றும், அதன் மூலம் எதிரே இருப்பவர் மீது சில விநாடிகளுக்கு மின்சாரம் பாய்ந்து அவரை தடுத்து நிறுத்த முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும், காலணியில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம், ஆபத்தில் இருக்கும் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் செல்லும் என்றும் மாணவி கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக மாணவி உருவாக்கியுள்ள பிரத்யேக காலணி, கோவாவில் நடைபெற்ற சர்வதேச புதிய கண்டுபிடிப்புகளில் விருதை வென்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்