விவசாயிகளுக்கு ஸ்பெஷல் எலக்ட்ரிக் பைக் - ஒரே முறை சார்ஜ்.. 525 கி.மீ டிராவல்

விவசாய வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை உருவாக்கி, கோவையை சேர்ந்தவர் அசத்தியுள்ளார்.

தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் கோவை முன்னணி நகரமாக விளங்குகிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவையைச் சேர்ந்த பரதன் என்பவர், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். விவசாயம், குறுந்தொழில் உள்ளிட்ட அனைத்து வணிக துறைகளில் பாரங்கள் ஏற்றி செல்லும் வகையில், பரதன் உருவாக்கியுள்ள இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த புதிய வாகனத்தில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 525 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும் என பரதன் குறிப்பிட்டார். புளுடூத், ஜி.பி.எஸ் உள்ளிட்ட மொபைல் செயலிகளுடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com