ஹாலோவின் பயங்கரம் - 151 பேர் உடல் நசுங்கி மூத்துத்திணறி மரணம் - எடுக்க எடுக்க வரும் சடலங்கள்

x

உலகை உலுக்கிய ஹாலோவின் பயங்கரம் - 151 பேர் உடல் நசுங்கி மூத்துத்திணறி மரணம் - எடுக்க எடுக்க வரும் சடலங்கள்

தென் கொரிய நாட்டில் நடைபெற்ற ஹாலோவின் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளது.

ஹாலோவீன் தினத்தன்று இறந்தவர்கள் மீண்டும் பூமிக்கு ஆவியாக வருவார்கள் என்பது நம்பிக்கை... வெளிநாடுகளில் இந்த நாளன்று பேய் வேடமணிந்து மக்கள் வீதிகளில் உலா வந்து திருவிழாவாகக் கொண்டாடுவர்... அப்படி தென் கொரியாவில் நடைபெற்ற ஹாலோவின் திருவிழாவின் போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது... தலைநகர் சியோலில் உள்ள இடேவோன் நகரில் ஹாலோவின் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட மிக பிரம்மாண்டமான திருவிழா என்பதால் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். ஆனால் விழா நடைபெற்றது மிகவும் குறுகலான இடம்.

போதிய இடமில்லாமல் மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னேற முயல கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் மூச்சு திணறி அங்கேயே ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்... 50க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது... உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கூட்ட நெரிசலில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனாயாரையும் எடுக்க முடியாதளவு ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடந்ததால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது... பலருக்கு சாலையிலேயே வைத்து முதலிதவி அளிக்கப்பட்ட நிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 151ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர். மேலும் காயம் அடைந்த பலர் மருத்துவமனையின்


Next Story

மேலும் செய்திகள்