தென்னாப்பிரிக்காவின் நம்பர் 1 சுற்றுலா நகரம்... அழகும் பிரமாண்டமும் கொண்ட கேப் டவுன்...
வெளிநாடுகளுக்கு டூர் போகலாம்னு சொன்னதுமே... நம்ம மைண்டுக்கு முதல்ல வர ஊர்களோட பேரு லண்டன், நியூயார்க், பட்டாய, மலேசியானு இப்டி எதாச்சும் ஒன்னா தான் இருக்கும்... ஆனா உலக புகழ் பெற்ற நகரங்களோட பட்டியலில் ஆப்பிரிக்க கண்டத்தில இருந்து ஒரு சிட்டி இடம் பெறுதுனா அதுதான் கேப் டவுன்!
தென்னாப்பிரிக்கானு சொன்னவுடனே நம்ம மைன்டுக்கு முதல்ல நியாபகம் வரது... நெல்சன் மண்டேலா, பழங்குடி கருப்பின மக்கள், மிஸ்டர் 360 ஏ.பி.டிவில்லியர்ஸ்... இவங்க தான்...
ஆனால், இந்தப் பொதுவான அடையாளங்களைத் தாண்டி, ஏகப்பட்ட சுற்றுலா தலங்களுக்கும் பேர்போன சிட்டியாக இருக்கு இந்த கேப்டவுன் நகரம்....
இப்போ சவுத் ஆப்ரிக்காவோட தலைநகரமாக இருக்கிற ஜோகன்ஸ்பர்க் (johannesburg) உருவாகுறதுக்கு முன்னாடியே... இந்த நாட்டோட முக்கிய நகரமாக கேப்டவுன் இருந்திருக்கு... இது மட்டுமில்லாம சவுத்ஆப்ரிக்காவோட வேலைவாய்ப்பு நகரமாகவும், சுற்றுலா நகரமாகவும் இருக்குறதுனால இந்த சிட்டிய நோக்கி மக்கள் படையெடுத்து வராங்கனே சொல்லலாம்...
இதுல இன்னொரு சுவாரஸ்யம் என்னனா... நம்ம பாட்ஷா ரஜினிக்கு மாணிக்கம்னு இன்னொரு பேரு இருக்குற மாதிரி... இந்த கியூட் சிட்டி... கடற்கரையை ஒட்டி இருக்குறதுனால... இதுக்கு துறைமுக நகரம்னு இன்னொரு பேரு இருக்கு...
எனக்கு ரொம்ப நாளாவே ஒரு டவுட்டுங்க... சவுத்ஆப்பிரிக்கா கிரிக்கெட் டீம பார்க்கும்போது... அந்த ஊர்ல நிறைய பேர் வெள்ளையா தான் இருப்பாங்க போலனு நினைச்சுட்டு இருந்தேன்...
ஆனால், இங்க கருப்பினத்த சேந்தவங்க தான் அதிகமா இருக்காங்க... அதாவது டிக்காஷன்ல கொஞ்சோன்டு பால் கலந்தால் கிடைக்குற காபி போல, இங்கே 80 சதவீதம் கருப்பினத்தவரும் 10 சதவீதம் வெள்ளை இனத்தவரும்... மாமன்... மச்சான்... அங்காளி பங்காளியா வாழ்ந்துட்டு வராங்க... ஹ்ம்ம் நம்ம ஊர்லயும் தான் இருக்கானுங்களே...
சரி.. சரி... ரொம்ப ஊர் பெருமைய பேசி... டூர்க்கு வந்ததயே மறந்துட்டோம்... அதுனால சட்டு புட்டுனு ஊருக்குள்ள இறங்கி அலப்பறை குடுக்க ஆரம்பிக்கலாம் வாங்க...
கேப்டவுன் சிட்டிக்குள்ள நுழைஞ்சதுமே முதல்ல நம்மள வரவேற்கும் இடம்... வெள்ளை மணல்களுடன் கண்ணைப் பறிக்க காட்சியளிக்கும் இந்த கேப்டவுன் கடற்கரைதான்.
சுற்றுலா வாசிகள் இங்க அதிகம் வர காரணம், கடற்கரை மணல்ல அள்ளி உடம்புல பூசிகிட்டு... சூப்பரா சூரியக் குளியல் போடதான்...
இந்த ஊர்ல மொட்டை வெயில் சுட்டு எரிச்சாலும்... கடல் தண்ணி ஜில்லுனு தான் இருக்குமாம்...
ஹாட்.. ஜில்லு... இந்த ரெண்டு ஃபீலிங்ஸ்ஸும் ஒரே நேரத்துல கிடைக்குறதுனால... சுற்றுலாவாசிகள் இங்கயே ரெஸ்ட்டாரெண்ட வாடகைக்கு எடுத்து குடித்தனம் பண்ணிட்டு வராங்க...
பீச்சுல சம்மர் குளியல் போட்ட கையோட அடுத்து நாம போகப்போற இடம்... boulders beach...
இப்போ தான பீச்சுல இருந்து வந்தோம் மறுபடியும் எதுக்கு பீச்சுனு உங்களுக்கு தோனலாம்... ஆனா இந்த பீச்சோட ஸ்பெஷல்லே இதோ... அன்ன நடை போட்டு வர குட்டி பென்குயின்கள் தான்...
இந்த பீச் பென்குயின்கள் வாழ ஏத்த இடமா இருக்குறதுனால... இங்க எக்கசக்கமா பென்குயின்கள் குவிஞ்சி கிடக்கு.
பெண்குயின்கள பாக்க வர சுற்றுலாவாசிகள்... அதுங்களுக்கு பிடிச்ச மீன சாப்பிட குடுத்துட்டு வராங்கலாம்... சரி வாங்க நாமலும் அதுங்களுக்கு சாப்பாடு குடுத்துட்டு வராலாம்...
கேப்டவுனில் அடுத்து நாம் பார்க்க போற இடம்... Victoria Alfred Waterfront...
இந்த இடத்தோட ஸ்பெஷல்லே... படகு சவாரிதான்.
இது மட்டுமில்லாம பிரமாண்ட ஷாப்பிங் மால்கள், சில்ரன்ஸ் பார்க், தீம் பார்க் தியேட்டர், இசை கச்சேரினு எல்லாமே ஒரே இடத்துல இருக்குறதுனால... இங்க மக்கள் கூட்டம் அதிகமாவே இருக்கும்...
சரி வாங்க அப்டியே படகுல சவாரி செஞ்சுகிட்டே ராபென் தீவுக்கு போகலாம்...
நம்ம ஊர்ல சித்ரவதைகளுக்கு பேமஸ்சான சிறைனா அந்தமான், திகார தான் சொல்லுவோம். அதே மாதிரி இந்த ஊர்ல ராபென் தீவுல இருக்க சிறைகள சொல்லலாம். அரசர்கள் காலத்துல இருந்து ஆங்கிலேயர் காலம் வரை இந்த தீவையே அவங்க சிறைச்சாலையா பயன்படுத்திட்டு வந்துருக்காங்க...
பலமான பாதுகாப்பு நிறைந்த இந்த சிறைச்சாலை, யாரும் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கு.
இதே சிறைல தான் தென்னாப்பிரிக்காவின் கருப்பு காந்தி என அழைக்கப்படும் நெல்சன் மன்டேலாவும் அடைச்சி வைக்கப்பட்டிருந்திருக்காரு.
இப்போ இந்த சிறைச்சாலை தீவு, அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத்தலமாகவும் செயல்பட்டு வருது.
கேப்டவுன் சிட்டில அடுத்து நாம பாக்க போற இடம்... table mountain
உலகின் மிகப் பழமையான மலைகள்ல ஒன்று தான் இந்த டேபிள் மலை.
என்னது டேபிள் மலையானு உங்கள மாதிரி ஆச்சர்யமா இந்த ஊர் காரங்க கிட்ட கேட்டேன்... அதுக்கு இந்த மலை முழுக்க முழுக்க செங்குத்தா இருக்குறதுனாலயும்... மேல மேல டேபில்களை அடுக்கி வச்ச மாதிரி இதோட தோற்றம் இருக்குறதுனாலயும்... இந்த மலைக்கு இப்படி ஒரு பேரு வந்துச்சுனு சொல்லுறாங்க...
முக்கியமா இந்த மலைல ஏற ரோடு வசதிலாம் கிடையாது... ஸ்கூல் படிக்கும் போது டேபிள்ல ஏறி ஆடுன மாதிரி தான்... இங்க இருக்க ஒவ்வொரு பாறை கற்கல் தாங்கி பிடிச்சு மேல ஏறனும்... ஒரு வேலை உங்களுக்கு இப்டி கஸ்டப்பட்டு மலை மேல ஏற பயமா இருந்தா... இதோ இந்த ரோப் கார்ல சவாரி செஞ்சு பயமே இல்லாம ஜாலியா போகலாம்...
இந்தத் தெரு முழுக்கவே பல வகையான நிறங்கள்ல வீடுகளுக்கு பெயிண்ட் அடிச்சிருக்கிறதால... கலர் ஃபுல்லான கேக் துண்டுகளைப் போல காட்சியளிக்குது இந்த இடம்
இதனாலயே இந்த இடத்த... செல்ஃபி எடுக்குறதுக்கும்... ஃபோட்டோ ஷூட் நடத்துறதுக்கான ஸ்பாட்டா மாத்திட்டாங்க... இந்த ஊர் மக்கள்...
கேப்டவுன் சிட்டில திராட்சைகள் அதிக அளவு விளையுறதுனால... ஒயினோட உற்பத்தியும் இங்க அதிகமா இருக்கும்...
அதனால அந்த ஒயினை பெருமை படுத்தும் விதமா... இந்த ஊர் மக்கள் Wacky Wine Festival அப்டினு ஒரு திருவிழாவ கொண்டாடுறாங்க...
இந்த திருவிழா அன்னைக்கு... திராட்சைல இயற்கை முறைல ஒயினை ரெடி பண்ணி... அதுலயே... குளிக்கிறது, குடிக்கிறது, கும்மாளம் அடிக்கிறதுனு அலப்பறை குடுத்துடுவாங்க இந்த ஊர் மக்கள்...
கேப்டவுன் கடற்கரையில பெரிய அளவிலான ராட்சத அலைகள் உருவாகும். அதனால இங்க அடிக்கடி சர்ஃபிங் போட்டி... சும்மா திருவிழா மாதிரி கலைகட்டுமாம்...
வருசத்து ஒரு தடவை... எப்படா தீபாவளி, பொங்கல்லாம் வரும்னு எதிர்பாத்து கொண்டாடுற மாதிரி... கேப்டவுன் மக்கள் வருசத்து ஒரு முறை எப்படா வரும்னு எதிர் பாத்து கொண்டாடுற ஒரு திருவிழா தான்... Street Food Festival...
இந்த திருவிழா அன்னைக்கு... கேப்டவுன்ல இருக்க மொத்த உணவு பண்டங்களும் இங்க குவிஞ்சு கிடக்கும்...
பாக்கும் போதே நாக்குல எச்சி ஊறுது...
இந்த ஃபுட்டெல்லாம் டேஸ்ட் பண்ண ஒரு வருசம் வரைக்கும் வெயிட் பண்ண முடியாது... இப்பவே... இந்த ஊர் தெருவோர உணவுகளை சாப்பிட்டு... ஒரு புடி புடிக்கலாம் வாங்க...
தெருவோர உணவுகள்...
தென்னாப்பிரிக்க மக்களின் ஃபேவரைட் உணவுனா அது இறைச்சி தான். அதுல எப்பவும் முதல் இடம் பிடிக்குறது இந்த நெருப்பு கோழி வறுவல்!
ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு வேர்கடலை மசாலாக்கள் நிறைந்த CHAKALAKA பெட்டர் சாய்ஸ்..
சிக்கன் ரோல் போல அரிசியில் தயாரகும் Rice Paper Roll...
ஆப்பிரிக்காதானே... அங்கே என்ன இருக்கப் போதுனு நினைக்கிறவங்கள வாவ்னு வாய் பிளக்க ஆச்சரியப்பட வைச்சிடுது கேப்டவுன் சிட்டி.
ஒரு முறை இந்த ஊருக்கு வந்து பார்த்தால் போதும்... அதுக்கப்புறம் கேப்டவுன் தான் டாப் டவுன்னு சொல்லுவாங்க... ஏனா அந்தளவுக்கு வசீகரமானது இந்த அழகு நகரம்... வாய்ப்பு கிடைச்ச நீங்களும் ட்ரை பண்ணுங்க...
