நெதர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - கெத்து காட்டிய தென் ஆப்பிரிக்கா..!

x

நெதர்லாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி கண்டது. பெனோனி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து, 189 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகலா மற்றும் ஷம்சி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 190 ரன்கள் இலக்கை 30வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா எட்டியது. கேப்டன் பவுமா 90 ரன்களும், மார்க்ரம் 51 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்