மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற மருமகன்...குத்திய கத்தியுடன் போலீஸ் சரண்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், குடும்ப சண்டையில், மாமியாரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, மருமகன் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த குப்பன் - கஸ்தூரி தம்பதிக்கு, அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதில், மீண்டும் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில், கஸ்தூரி தனது தாய் கல்யாணி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பின்னர் மாமியார் வீட்டிற்கு சென்ற குப்பன், அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, இருவருக்குள் பிரச்சினை நடப்பதற்கு மாமியார் கல்யாணி தான் காரணம் எனக்கூறி, அவரை, கத்தியால் கத்தியுள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலை செய்த கத்தியுடன், குப்பன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com