மீன் விற்க சொகுசு கார் வாங்கி தந்த மகன்.. "ஒரு அப்பனுக்கு இத விட என்னங்க வேணும்"

மீன் விற்க சொகுசு கார் வாங்கி தந்த மகன்.. "ஒரு அப்பனுக்கு இத விட என்னங்க வேணும்"
Published on

சைக்​கிளில் மீன் விற்கும் நபரை நாம் அனைவரும் பார்த்திருப்போம்...ஆனால் எர்டிகா சொகுசு காரில் பயணித்து மீன் வியாபாரம் செய்யும் நபரை ராமநாதபுரத்து மக்கள் வியந்து பார்க்கின்றனர். இராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன் வயல் பகுதியை சேர்ந்த சிவானந்தம்- காளியம்மாள் தம்பதிக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர் . கண்மாயில் மீன் பிடித்து வியாபாரம் செய்து வந்த சிவானந்தம், மிகவும் சிரமத்துடன் தமது மகனை மெரைன் இன்ஜினியரிங் படிக்க வைத்து ஆளாக்கி உள்ளார்

தற்போது மகன் சுரேஷ் கண்ணன், வளைகுடா பகுதியில் செயல்பட்டு வரும் கப்பல் நிறுவனத்தில் மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்தில் பொறியாளராக பணி செய்து வருகிறார். இதனையடுத்து, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்த சுரேஷ் கண்ணன், தமது தந்தை சிவானந்தனுக்கு மீன் வியாபாரம் செய்வதற்காக, 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

மகன் பரிசாக தந்த எர்டிகா சொகுசு காரில், சிவானந்தன் தம்பதி மீன்களை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்து வருகின்றனர் . தந்தைக்கு சொகுசு கார் பரிசளித்த மகனின் செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்" என்னும் திருக்குறளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது சுரேஷ் கண்ணனின் இந்த செயல் .

X

Thanthi TV
www.thanthitv.com