துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராணுவ வீர‌ர்! - அதிர்ச்சியில் கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்.. ஆறுதல் சொல்லமுடியாமல் தவிக்கும் ஊர் மக்கள்

x

பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் தேனியை சேர்ந்த வீர‌ர் யோகேஷ் குமார் உயிரிழந்துள்ளதால், அந்த கிராம‌மே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜெயராஜ் ரத்தினம் தம்பதியர். இவர்களுக்கு யோகேஷ் குமார் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். யோகேஷ்குமார் இந்திய ராணுவத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியில் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்து யோகேஷ்குமாரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமண ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த‌து கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்ணீரில் மூழ்கியுள்ள யோகேஷ்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாமல், ஊர் மக்கள் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்