சூரிய கிரகணத்திற்கு பின் - கோயில்களில் நடந்த சிறப்பு பூஜை

x

இந்த ஆண்டுக்கான கடைசி சூரிய கிரகணம் நிறைவடைந்ததை தொடர்ந்து, நெல்லை நெல்லையப்பர் கோயிலில் சூரிய கிரகண சாந்தி தீர்த்தவாரி நடைபெற்றது.

சூரிய கிரகணத்தை ஒட்டி, நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலில் நண்பகல் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டது.

பின்னர், சூரிய கிரகணம் நிறைவடைந்த பிறகு, நெல்லையப்பர் திருக்கோவில் பொற்றாமரை குளத்தில், சுவாமி சந்திரசேகரர் பவானி அம்பாளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனையும் நடைபெற்றது.

பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்