சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் இவ்ளோ பேர் பயணம் - ஷாக் கொடுத்த ரிப்போர்ட்

x

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அக்டோபர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 61.56 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் கூடுதலாக 43 ஆயிரத்து 454 பேர் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக, அக்டோபர் 21ஆம் தேதி, 2.65 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அக்டோபர் மாதத்தில் கியு.ஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 18.57 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

பயண அட்டைமுறையை பயன்படுத்தி 36.33 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளைர்.


Next Story

மேலும் செய்திகள்