கிணற்றில் சிக்கி தவித்த நல்ல பாம்பு... லாவகமாக மீட்ட சமூக ஆர்வலர் - வெளியான வைரல் வீடியோ

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் ஒரு வாரமாக இருந்த நல்ல பாம்பு மீட்கப்பட்டது. கணிசப்பாக்கம் கிராமத்தில், 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் சிக்கித் தவித்த நல்ல பாம்புவை மீட்க, ஒரு வாரமாக பொதுமக்கள் போராடினர். மீட்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சமூக ஆர்வலர் செல்லா என்பவர், கிணற்றின் மேல் பலகைகள் அமைத்து, கயிறு மூலம் உள்ளே இறங்கி, பாம்பை மீட்டார்.


Next Story

மேலும் செய்திகள்